ராகுல்காந்தி மீதான நீதிமன்ற வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.! அமெரிக்கா கருத்து.!
ராகுல்காந்தி மீதான நீதிமன்ற வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். – அமெரிக்க வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல்.
2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடகத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக அவர் மீது குஜராத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சூரத் நீதிமன்றம் அண்மையில் அவருக்கு தண்டனை விதித்தது.
எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு :
இந்த சிறை தண்டனையை அடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை தாண்டி எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிர்வலையையும், எதிர்ப்பையும் உண்டாக்கியது .
நீதித்துறை சுதந்திரம் :
இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கருத்து கூறியுள்ளார். அதில், ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் முக்கியமான ஒன்றாகும். மேலும், இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் (அமெரிக்கா) கவனித்து வருகிறோம். என குறிப்பிட்டார்.
அமெரிக்கா – இந்தியா உறவு :
இந்தியவுடனான எங்கள் உறவில் கருத்து சுதந்திரம் உட்பட, ஜனநாயக பங்களிப்பு என பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் அமெரிக்கா இந்திய அரசாங்கத்துடன் துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டார்.
முக்கிய காரணிகள் :
மேலும், நாங்கள் ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாப்பதையும் எங்கள் இரு நாட்டு ஜனநாயகங்களையும் வலுப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக தொடர்ந்து அவற்றை முன்னிலைப்படுத்தி வருகிறோம் எனவும் அமெரிக்க வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியுள்ளார்.