திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது என அண்ணாமலை ட்வீட்.
செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டியிருக்கிறது அந்த கும்பல்.
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்கள் அருகிலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பது, இந்த ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது.
இது போன்ற தொடர் சம்பவங்களால், பொதுமக்களுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. திமுக அரசு தனது மெத்தனப் போக்கைத் தொடராமல், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…