பாகிஸ்தானில் கடந்த சில வ்ருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இதற்கு முழு காரணமாக சொல்லப்படுவது பிரதமர் இம்ரான் கான் என்றும் அவரின் மோசமான அணுகுமுறையை இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இம்ரான் கானுக்கு எதிராக ஆளும் கட்சினர் முதல் கூட்டணி கட்சியினரே எதிராக திரும்பியுள்ளனர்.இதனை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் நாளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னரே இம்ரான் கான் பதவி விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த பவர் ஷோ ஒன்றில் பேசிய இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க லஞ்சம் கொடுக்க முன்வந்த எதிர்க்கட்சிகளின் சலுகைகளை மறுத்ததற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) சட்டமன்ற உறுப்பினர்களை பாராட்டினார். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
பிரதான எதிர்க்கட்சிகளான (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி) பற்றி அவர் குறிப்பிடுகையில், இந்த நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக “மூன்று எலிகள்” கொள்ளையடித்து வருகின்றன.
“கடந்த 30 ஆண்டுகளாக, அவர்கள் கூட்டாக நாட்டின் இரத்தத்தை உறிஞ்சி, வெளிநாட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளனர், வெளிநாட்டு கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நாடகம் எல்லாம் என்ஆர்ஓ (தேசிய நல்லிணக்க ஆணை)க்காக நடக்கிறது என்று கூறினார்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…