திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது – வைகோ
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் மத்திய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது என வைகோ கண்டனம்
இன்று அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. இதற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வைகோ அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் மத்திய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்று நினைத்து தலைமைச் செயலகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறது. மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், இவ்வாறு அமலாக்கத்துறை அத்துமீறி நுழைவது மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தமிழ்நாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துவதும், திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துளளார்.