அரசியல்

அதிமுக – பாஜக முறிவுக்கு வேறு ஏதோ காரணம் உள்ளது – டிடிவி தினகரன்

Published by
லீனா

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாஜகவில் இருந்து அதிமுக விலகியதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாஜகவில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், பாஜகவை வைத்து தான் பழனிசாமி கட்சியை கையகப்படுத்தினார். கழக நிர்வாகிகளையும் வழக்கு பாயலாம் என மிரட்டி பணிய வைத்தார். இப்பொழுதாவது பாஜகவிற்கு பழனிசாமியின் துரோக சிந்தனை புரியும் என நினைக்கிறேன்.

ஸ்டாலின் ஆட்சி விளம்பர ஆட்சியாக மட்டுமே இருக்கிறது.  பழனிசாமி ஆட்சி மீதான கோபத்தால் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். 2026 தேர்தலில் இருவரையும் ஒதுக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

அதிமுக – பாஜக முறிவிற்கு அம்மா, அண்ணா மீதான விமர்சங்கள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அவற்றையும் தாண்டி ஏதோ ஒரு காரணம் உள்ளது. அம்மா மீதான விமர்சனத்துக்கு பின்பு தான் டெல்லி சென்று கூட்டணியை உறுதி செய்தார்கள்.  டெல்லி சென்ற இபிஎஸ் தரப்பினர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம்.அப்படி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக இரண்டு மாதங்களில் முடிவெடுப்போம் இப்போது இருப்பது தலைவர் காலத்து அம்மா காலத்து அதிமுக இல்லை தவறானவர்களால் களவாடப்பட்ட கையகப்படுத்தப்பட்ட அதிமுக என விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

8 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

9 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

11 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

12 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

12 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago