பேனா நினைவு சின்னத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!
பேனா நினைவு சின்னத்தை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடல்வளத்தை பாதுகாக்க கோரி, பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பொதுநலன் கருதி மனுதாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.