குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநில மைசூர் வருகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் முதுமலை அடுத்த மசினகுடி ஹெலிபேடில் உள்ளார்.
பின் அங்கிருந்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காரில் செல்ல உள்ளார். அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார். அங்கிருந்து மாலை 5 மணி அளவில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.
சென்னை விமான நிலையம் நிலையத்தில் குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் மற்றும் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கின்றனர. பின் ஆளுநர் மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6- ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 165-வது பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
பின் மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் அரங்குக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின் அவருக்கு ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுவதாவும், இந்த விருந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…