துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை – ஆளுநர்
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழுவை நியமித்து செப்டம்பர் 13-ல் அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழக ராசு துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை நீக்கியிருந்தது. இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதன்படி, துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தனி தேடுதல் குழு அமைத்துள்ளதாகவும், தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Press Release: 63 pic.twitter.com/kswdwULXay
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 26, 2023