நேபாளத்தில் பிரசந்தா தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.!
நேபாளத்தில் பிரசந்தா’ தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமால் தஹால் ‘பிரசந்தா’ தலைமையிலான கூட்டணி அரசு, பாராளுமன்ற அவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு ஆதரவாக 268 பேரும் அதற்கு எதிராக இரண்டு பேரும் வாக்களித்தனர்.
நேபாளத்தின் பிரதான எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவளித்தது. இதனையடுத்து பேசிய பிரசாந்தா, மிகபெரிய ஆதரவைப் பெறுவதில் தான் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார், மேலும் அரசியலமைப்பின்படி உளப்பூர்வமாக செயல்படுவதாகக் கூறினார்.
68 வயதான சிபிஎன்-மாவோயிஸ்ட் தலைவர், கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றார், அரசியலமைப்பின் 76(2) வது பிரிவின் கீழ் எந்தஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், வெற்றிபெற்ற ஒருமாதத்திற்குள் அவையில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.