2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது இருந்தே அதற்கான பிரச்சார வேலைகளை ஆரம்பித்துள்ளார். தற்போது Speaking for INDIA என்ற தலைப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும் முதல் ஆடியோ தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. அதனை தனது X சமூக வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை, முதல்வர் எடுத்துரைத்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளாக கூறிவிட்டு , தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்றும், ஜிஎஸ்டி, மதவாதம் என பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பாக மணிப்பூர் வன்முறை பற்றி பேசியுள்ளார். அதற்கு காரணம் குஜாரத் கலவரம் தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் தீ விபத்து சம்பவத்தில் 58 இந்துக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து , குஜராத்தில் இஸ்லாமியர்க மீதான தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்தது தற்போதைய பிரதமர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
அவர் கூறுகையில், மதவாதத்தை கையில் எடுக்கும் பாஜக மக்களின் மத உணர்வுகளை தூண்டி அதில் குளிர்காய பார்க்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் பாஜக விதைத்த வன்முறை வெறுப்பு விதை தான், 2023ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தை பற்றி எரிய வைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பற்றவைக்கப்பட்ட மதவாத தீ அப்பாவி மக்களின் உயிரையும் சொத்துக்களையும் காவு வாங்கி உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்தியாவின் கூட்டணி தத்துவத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் எப்போதெல்லாம் ஆபத்து வந்துள்ளதோ அப்போதெல்லாம் திமுக முன்னணி வரிசையில் வந்து போராடி உள்ளது.
தமிழ்நாட்டில் கால்பதித்து இந்தியாவுக்காக பேசும் கட்சியாக திமுக வளர்ந்துள்ளது. பல்வேறு பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கிய திமுகவுக்கு அடுத்து ஒரு கடமை உள்ளது. 2024 தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது எமது தீர்மானிக்க வேண்டிய தேர்தல் தான் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் மாநிலங்களை அழிக்கும் படு பாதகமான செயல்கள் செய்யப்பட்டுள்ளன என பல்வேறு குற்றசாட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…