BJP Party Member Kushboo -Former Tamilnadu CM Kalaignar Karunanidhi [File Image]
தமிழ் திரையுலகில் 80-களில் அதிகமான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை குஷ்பூ, அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைவராக இருக்கும் சமயத்தில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியில் ஈடுபட துவங்கினார்.
அதன் பிறகு, 2014இல் திமுகவில் இருந்து விலகி, சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு 2020 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020 அக்டோபரில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது தமிழக அரசியலில் முக்கிய பிரமுகராக வலம் வருகிறார். குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
இன்று செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் ஆசிரியர் பற்றியும், தங்கள் ரோல் மாடல் குறித்தும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதே போல நடிகை குஷ்பூவும் தனது X வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அரசியல் பள்ளியில் எனது முதல் ஆசிரியர் என அவர் முதலில் அரசியல் களம் கண்ட திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…