5 நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்..!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக நாளை காலை 10 மணிக்கு டெல்லி பயணம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக நாளை காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த நிலையிலும், அதிமுக, பாஜக தரப்பில் அமைச்சர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி செல்லவுள்ளார்.
டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்து ஜூன்-27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.