Senthil Balaji : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் – கோர்ட் இன்று தீர்ப்பு..!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் எம்எல்ஏ, எம்பிக்கள் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் இந்த ஜாமீன் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என விசாரிக்க மறுத்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு , அந்த வழக்கில், ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என கூறியது.
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கான ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமை (செப்.15) ஒத்திவைத்து இருந்தது. இதனை தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், வழக்கின் தீர்ப்பானது வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025