பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம்…! முதல்வர் நாளை ஆலோசனை…!
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை
செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில், மகளிர் உரிமை தொகை திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.