சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார் – ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார். அந்த அளவிற்கு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. பூத் கமிட்டிகள் அங்கங்கு அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் மக்களை சந்தித்து வருகின்றனர்.
தினசரி தங்கம் விலையில் மாற்றம் இருப்பதைப் போல தக்காளி விலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளனர். ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மீனவர்களின் நலன் கருதி கடலுக்கு நடுவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்போராட்டத்தை தொடர்வோம். திமுக ஆட்சியில், மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மீனவர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ், டிடிவியின் போராட்டத்தில் அதிமுக கொடி பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடர்வோம். மேலும், பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சூழலலை பொறுத்து முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார்.