அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்…!

Puducherry CM Rangasamy

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% உள் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது. இதன் மூலமாக 37 இடங்கள் எம்.பி.பி.எஸ், 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், நடப்புக் கல்வி ஆண்டிலேயே 10 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்