பொதுமக்கள் கவனத்திற்கு..! நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது…!
சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.
நேற்று தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தக்காளி விலை உயர்வு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் தான் தெரிவித்திருந்தார்.
மேலும், சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி, வடசென்னையில் 32 ரேஷன் கடைகளில், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது.
நியாய விலை கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் கிடையாது. குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கிடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.