இலங்கையில் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் !
இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்,அதன் படி அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கே செல்கிறது.
இலங்கை மக்களின் போராட்டம் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.இதனிடையில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.கடுமையான கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்குப் பிறகு, காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கிச் சுடத் தொடங்கியதால், பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே பதட்டமான சூழல் நிலவுகிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.