சிட்னியில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி எழுச்சி உரை..!

இந்தியா-ஆஸ்திரேலியா உறவு பரஸ்பர நம்பிக்கை மரியாதையால் உருவானது என்று பிரதமர் மோடி பேச்சு.
அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடந்த சமூக நிகழ்ச்சியில், கலந்துகொண்டார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோருக்கு உற்சாக வரவேற்புக்கு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதாமற் மோடி, ” 2014ல் நான் இங்கு வந்தபோது, இந்தியப் பிரதமருக்காக 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என்று உங்களிடம் வாக்குறுதி அளித்தேன். அதனால், நான் இங்கே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா ஆஸ்திரேலியாவில் இணைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல தரப்பு மக்கள் வசிக்கின்றனர். இந்தியா-ஆஸ்திரேலியா உறவு பரஸ்பர நம்பிக்கை மரியாதையால் உருவானது என்று தெரிவித்துள்ளார்.