பிரதமர் நாளொன்றுக்கு 17 மணி நேரம் பணியாற்றுகிறார் – அமித்ஷா பேச்சு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்..!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நரேந்திர மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர். நாட்டு மக்களுக்காக பிரதமர் ஓய்வில்லாமல் நாளொன்றுக்கு 17 மணிநேரம் உழைத்து வருகிறார்.
பிரதமர் மோடி, இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார்; உலகளவில் அதிகம் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திரமோடி. நரேந்திர மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமர் நாளொன்றுக்கு 17 மணி நேரம் பணியாற்றுவதாக மக்களவையில் அமித்ஷா தெரிவித்தார். கடந்த 80 நாட்களாக 1360 மணிநேரம் பணியாற்றியும் மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள். நம்பிக்கையில்லா தீர்மானம் சரி தானே!’ என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நாளொன்றுக்கு 17 மணி நேரம்
பணியாற்றுவதாக மக்களவையில் அமித்ஷா தெரிவித்தார்.கடந்த 80 நாட்களாக 1360 மணிநேரம் பணியாற்றியும் மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால்
நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்.நம்பிக்கையில்லா தீர்மானம் சரி தானே! pic.twitter.com/wqGoNy13eq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 9, 2023