பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது – சிபிஐஎம்

Published by
லீனா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது என சிபிஐஎம் விமர்சனம். 

பிரதமர் மோடி நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்கு வழிகளை கடைபிடித்து உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து, சிபிஐஎம் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், குறுக்கு வழி பிடிக்காது என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரி, மணிப்பூர், பீகார், மேகாலயா, சிக்கிம், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பாஜக நடத்திய ஜனநாயக படுகொலைகள் மூலமே ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதை வசதியாக மறுத்துவிட்டார் என பதிவிட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

11 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

11 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

13 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

13 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

16 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

16 hours ago