பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது – சிபிஐஎம்
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது என சிபிஐஎம் விமர்சனம்.
பிரதமர் மோடி நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்கு வழிகளை கடைபிடித்து உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து, சிபிஐஎம் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், குறுக்கு வழி பிடிக்காது என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரி, மணிப்பூர், பீகார், மேகாலயா, சிக்கிம், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பாஜக நடத்திய ஜனநாயக படுகொலைகள் மூலமே ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதை வசதியாக மறுத்துவிட்டார் என பதிவிட்டுள்ளனர்.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது #ModiLies #ModiDestroyedDemocracy #IndianDemocracy pic.twitter.com/smxl2fDz75
— CPIM Tamilnadu (@tncpim) December 12, 2022