யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை- மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங்
அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 62 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31, வரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசாங்கம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து, நேற்று மோசமான வானிலை காரணமாக இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் அவர்கள் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.