தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம் – செல்வப்பெருந்தகை

selvaperunthagai

எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவதை தடுக்க பாசிச பாஜக அரசு திட்டம் என செல்வப்பெருந்தகை அறிக்கை. 

குஜராத் உயர்நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து விமர்சித்ததாக சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், இந்தியாவில் இருக்கும் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தி விடலாம் என்று ஆளும் பாசிச பா.ஜ.க. அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. அன்புத்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்கள், மோடி அரசாங்கத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டு கடுமையான குரலில் கேள்வி கேட்கிறார்.

எந்த சக்தியாலும் அவரை மௌனமாக்க முடியாது. விசாரணை அமைப்புகளை வைத்து அன்புத்தலைவர் திரு.ராகுல் காந்தி  அவர்களை அச்சுறுத்தி விடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது. எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவதை தடுக்க பாசிச பாஜக அரசு திட்டம். தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம்.

நீதித்துறை மீது முழு நம்பிக்கையிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தலைவர் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த போராட்டத்தில் தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் அன்புத்தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்