அரசியல்

மதுரை வலையங்குளத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது அதிமுக எழுச்சி மாநாடு.!

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் சிறப்புரைக்கு முன்னர் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் […]

3 Min Read
eps maanadu

வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிப்பு – மத்திய அரசு

வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதியை விரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரும் டிசம்பர் மாதம் வரை இந்த வரி விதிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் வெங்காய விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
onion

12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளார். . அதன்படி, ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமார் ஜெயந்த் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிஜி தாமஸ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராக நியமனம் […]

2 Min Read
tamilnadu government

ஆங்கிலத்தில் உள்ள சட்டத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கலாமா? – ப. சிதம்பரம்

புதுக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டங்களின் பெயர்களை மத்திய அரசு ஹிந்தியில் மாற்றுகிறது. ஹிந்தியில் பெயர் வைக்கலாம் வைக்க கூடாது என்று சொல்லவில்லை.  ஆனால் ஆங்கிலத்தில் உள்ள சட்டத்துக்கு ஹிந்தியில் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீட் விலக்கு போராட்டம் நியாயமானது தான். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என பலமுறை நான் தெரிவித்துள்ளேன். நாட்டின் பொருளாதாரம் வருமானமும் ஒவ்வொரு ஆண்டும் […]

2 Min Read
Former Union Minister P Chidambaram

அதிமுக மாநாடு – மதுரை வந்தடைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிடபட்டுள்ளது. மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் […]

4 Min Read
Edapadi palanisamy

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் என்ன அகும்? சிவசேனா எம்.பி. கருத்து!

சிவசேனா (யுபிடி) தலைவரும் எம்பியுமான பிரியங்கா சதுர்வேதி, பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தால் எதிர்க்கட்சி கூட்டணி அவருக்கு ஆதரவளிக்கும் என்று  தெரிவித்துள்ளார். வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கு, பிரியங்கா காந்தி வெற்றிபெறச் செய்ய எதிர்க்கட்சி கூட்டணி ஒத்துழைக்கும் என்று,  சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் […]

3 Min Read
Priyanka Gandhi - Priyanka Chaturvedi

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிக்க ஆய்வு – அமைச்சர் ஏ.வ.வேலு

பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குஜராத்தில் நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடலூரில் பசுமைவள துறைமுகத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், பசுமைவள துறைமுகத்தில் ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர சுற்றுலா, கடல் நீர் […]

2 Min Read
velu

ஜார்ஜியா குற்றப்பத்திரிகை வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சரணடைய வாய்ப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளர்களுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தானாக முன்வந்து சரaணடைய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம்  24 அல்லது 25 அன்று ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைவார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜார்ஜியாவில் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். […]

3 Min Read
Donald Trump

நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம் – அமைச்சர் உதயநிதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில்,  குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் விலக்குக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அணியினர் சார்பில் […]

3 Min Read
Minister Udhayanidhi stalin

உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

கடந்த சில நாட்களாக ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்த நிலையில், அங்கு கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரால், அங்கு 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

2 Min Read
PM Modi

கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்.? 3 மாதங்கள் கடந்தும் இன்னும் திணறும் பாஜக.!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 10ஆம் தேதி நடைபெற்று, மே 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக பிரதான கட்சிகள் தனித்தனியாக களமிறங்கின. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை ஆட்சியை கைப்பற்றி இருந்த பாஜக 66 இடங்களை வென்று தோல்வி அடைந்து இருந்தது. […]

6 Min Read
Karnataka BJP

லாப நோக்கத்திற்காக கோயம்பேடு மார்க்கெட் இடமாற்றம்.? விஜயகாந்த் கடும் கண்டனம்.!

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை என பெயர் பெற்ற கோயம்பேடு காய்கறி சந்தையை நிர்வாக காரணங்களுக்காக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு அந்த இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், விளையாட்டு மைதானம் போன்றவை […]

4 Min Read
Koyambedu Market- DMDK Leader Vijayakant

அதிமுக பொதுக்குழு கூட்டம்.! திமுக உண்ணாவிரத போராட்ட தேதியில் அதிரடி மாற்றம்.!

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி நாளை தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திமுக இளைஞர் அணியினர், திமுக மருத்துவர் அணியினர், திமுக மாணவர் அணியினர் ஆகிய அணியினர் மட்டும் இந்த போராட்டத்தினை நடத்த உள்ளனர் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டமானது மதுரையில் மட்டும் நாளை நடைபெறாது என்றும், மதுரையில் வரும் 23ஆம் தேதி திமுக […]

3 Min Read
ADMK Madurai Meeting - DMK Protest

தேர்தலுக்காக கச்சத்தீவை கையிலெடுக்கும் திமுக.! எங்கள் மாநாடு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும்.! ஜெயக்குமார் கருத்து.!

மதுரையில் நாளை அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், மாநாட்டை பிரமாண்டமாக நடத்த உள்ளனர்.  இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பேருந்து, கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு புறப்பட தொடங்கி உள்ளனர். அந்தவகையில், சென்னை ராயபுரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் […]

7 Min Read
Former ADMK Minister Jayakumar

காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்பதில் உண்மையில்லை.! கே.எஸ்.அழகிரி பேட்டி.!

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பொறுப்பில் கே.எஸ்.அழகிரி உள்ளார். அவருடைய பதவிக்காலமானது முடியவுள்ளதால், அவர் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படலாம் என தகவல்கள் பரவின. இந்நிலையில், நேற்று பெங்களூரு சென்றிருந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பு முடிந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறார் என்ற செய்தியில் உண்மையில்லை என தெரிவித்தார். என்னுடன் வந்தவர்கள் […]

2 Min Read
Congress State President KS Alagiri

நீட் தேர்வு ரத்து.! பொய்யான வாக்குறுதிகள்.! திமுக மீது வானதி சீனிவாசன் கடும் குற்றசாட்டு.!

பாஜக நெசவாளர் அணி சார்பாக நேற்று தேசிய கைத்தறி தின விழா கொண்டப்பட்டது. இந்த விழாவில் நடைபெற்ற ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நீட் தேர்வு ரத்து பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது . தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார் என எம்எல்ஏ வானதி […]

3 Min Read
BJP MLA Vanathi Srinivasan

ஆளுக்கு 1000 ரூபாய்.. 250 கோடி செலவு செய்து ஆள் சேர்க்கிறார்கள் – டிடிவி தினகரன் விமர்சனம்

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை பிரமாண்டமாக மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி […]

6 Min Read
TTV DHINAKARAN

கச்சத்தீவு விவகாரம்… திமுக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் விமர்சனம்.!

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து எனக்கு கடிதம் எழுதுகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அது தாரை வார்க்கப்பட்டது என ஆவேசமாக பேசினார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு, தற்போது அந்நிய நாட்டுக்குச் சொந்தமாக உள்ளது. அப்போதைய பிரதமர் […]

8 Min Read
L MURUGAN

பொய்யான குற்றசாட்டு.. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.! அண்ணாமலை மீது காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு புகார்.! 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த நடைபயணம் விருதுநகர், நெல்லை , தூத்துக்குடி என கடந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை. இந்நிலையில் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கையில் அண்ணாமலை, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பற்றி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் , நெல்லை […]

3 Min Read
BJP State President Annamalai

களைகட்ட தயாராகும் அதிமுக மாநாடு… குளிர்சாதன வசதியுடன் மதுரைக்கு செல்ல சிறப்பு ரயில்…

அதிமுக சார்பில் நாளை மதுரையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கவுள்ளார். பல முக்கிய அதிமுக தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டிற்கு வருவதற்கான பயண ஏற்பாடுகளை அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை, நடைபெறும் மாநாட்டிற்கு […]

3 Min Read
ADMK Chief Seacretary Edappadi palanisamy