இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார்.பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இன்று இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது. இன்று பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதன் பின்னர் மாலத்தீவிற்கு விமானம் மூலம் கிளம்பினார். மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற […]
அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்வதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 70-வது இந்திய குடியரசு தின விழா மற்றும் 150-வது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்கிறார். அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க அதிபரை […]
இந்தியா- அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையேயான, மூன்று நாள் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியுள்ளது. தீவிரவாத்தை ஒழிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. ‘வஜ்ர பிரகார்-2018’ என்ற தலைப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி, கடந்த மாதம் 19-ம் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ‘வஜ்ர கயா’ எனப்படும் […]
தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் ஒருபகுதியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொருளாதார குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறினார். கருப்புப் பணத்தை ஒழிக்க உலக தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பு சர்வதேச வளர்ச்சிக்கான இஞ்சின் என தெரிவித்தார். மேலும் தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக […]
கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற இருந்தது.காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 3 பேர் மாயமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதேபோல, 78 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ், 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ள […]