வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் . முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார் என்று அமமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் […]
தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டது என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், சென்னை மாநகரம் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது .தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டன. ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு […]
ரிங் மாஸ்டர் மீது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்’என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்.சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கதமிழ்ச்செல்வனை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சிக்கு இதுதான் நிலை என்று அமைச்சர் […]
தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார்? என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு […]
நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை இல்லை,நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது;.அத்திட்டங்களை அதிமுக […]
தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன்அரசியல் வியாபாரி.அதனால்தான் ஜெயலலிதா அவரை 10 ஆண்டுகள் தள்ளிவைத்தார் தினகரனின் சுயரூபம் தெரிந்துவிட்டது.அவரின் கட்சி காலாவதியாகி விட்டது சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு வரலாம்.தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் . மழைநீர் சேமிப்பு முறையை அனைவரும் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மேகமூட்டமாக உள்ளது, இது யாகத்தால் ஏற்பட்டு உள்ளது.ஸ்டாலின் அவர்கள் குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று […]
இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் பலர், ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய, மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,ஈரோட்டில் 2 பத்திரிகையாளர்களை ஆளும் கட்சியினர் தாக்கியது கண்டனத்திற்குரியது. சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது. பத்திரிகையாளர்களை தாக்கிய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் குடியசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி பல சதாப்தங்களுக்கு பின்பு இந்த அரசாங்கம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்று பிரித்து பார்க்கவில்லை என்றும் 130 கோடி மக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை உயர்த்துவதில் எனக்கு எல்லையற்ற […]
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில் கர்நாடக தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்காமல் நாள்களை கடத்தி வந்தது இதற்கு இடையில் மேகதாது ஆணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய வளாகத்தை வட்டமிட்டு வந்த நிலையில் நேற்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எங்கள் விவாசாயிகள் தண்ணீர் இன்றி போராடி வருகின்றனர் இதில் எப்படி தமிழகத்திற்க்கு தண்ணீர் திறக்க முடியும் எங்களுக்கே இங்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி […]
மேற்குவங்கம், கேரளா உட்பட 12 மாநில ஆளுநர்களின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய இருக்கும் புதிதாக ஆளுநர் பதவிக்கு பாஜக காட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்னன். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை […]
குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தை சேர்ந்த ஜெய்ஷங்கர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.பின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இதனால் பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டார்.இவர் அண்மையில் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளாராக களமிறங்க […]
தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,ரேடியோவில் கொடுத்த பேட்டி தொடர்பாக தங்க தமிழ்செல்வன் என்னிடம் விளக்கம் அளித்தார், இது குறித்து அவரை எச்சரித்தேன்.ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிலிருந்து நீக்குவேன் என்றேன்.தங்க தமிழ்செல்வனை நீக்க அச்சமோ, […]
அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும் என்னை பிடிக்காவிட்டால் […]
அதிமுகவின் முடிவுகளைப் பற்றியோ பொது வெளியில் கருத்துகளை கூறாமல் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் விடுத்த வேண்டுகோளில், தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளை பற்றியோ, அதிமுகவின் முடிவுகளைப் பற்றியோ பொது வெளியில் கருத்துகளை கூறாமல் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் […]