தி.மு.க. கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பதவில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார் அவருடன் அக்கட்சியின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவரும் உதயநிதி ஸ்டாலின் தந்தையுமான மு க ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது
தி.மு.க. கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பதவில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.இதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவியை அக்கட்சி வழங்கியுள்ளது.இது தொடர்பாக அகட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.
RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு எழுதி வருகிறனர்.ஆனால் அண்மைகாலமாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் குவிந்தது. இந்நிலையில் இன்று ஒரு அறிவிப்பை விடுத்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் அதில் RRB எனப்படும் […]
லஞ்சம் வாங்கிய 200 அரசு ஊழியர்கள் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் இந்த புகாரில் சிக்கிய 400 பேருக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உபியில் யோகி ஆதிநாத் தலையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவர் போருப்பேற்ற நாளில் இருந்து அம்மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களையும்,அதிரடியான அறிவிப்புகளையும் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு எல்லாம் அலுவலகத்தில் கால் வைக்கவேண்டும் இல்லை என்றால் அவர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று அறிவித்து உத்தரவிட்டார். தற்போது லட்சம் வாங்கிய […]
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைப் பெற்றது. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் கஜா மற்றும் ஒக்கி புயலின் போது மின் ஊழியர்கள் மிக சிறப்பாக பணியாற்றினார் அவர்களுக்கு எனது நன்றி என கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் , மின்துறை பற்றிய விவாதத்தை நான் இன்று பேச இருந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் என் கனவில் மின்துறை அமைச்சர் தங்கமணி தான் […]
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ,கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என கூறினார். மேலும் குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல் நலம் கெட தான் செய்யும் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறினார். 2018 -19 ல் டாஸ்மாக் வருவாய் – ரூ.31157.83 கோடியை பெற்றது. 2017 -18 ல் டாஸ்மாக் வருவாய் […]
திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்து திமுக […]
தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.அதை பயன்படுத்தி செந்தில் பாலாஜி வெற்றியும் பெற்றுள்ளார்.மற்றொரு முக்கிய நிர்வாகியுமான தங்க தமிழ் செல்வனும் அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் அமமுக […]
மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில்,அமெரிக்க படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறவை பயிர் – ஹெக்டேருக்கு ரூ 13500, மானாவாரிப் பயிர் – ஹெக்டேருக்கு ரூ 7410 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாடுமுழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களிலும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது . இதனிடையில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் […]
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை 5 மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி, ஆங்கிலம் தவிர, இந்தி,அசாமிஸ், ஓடியா ,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் தமிழ் இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் , உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 6 மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் […]
திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார். திமுகவை பொருத்தவரை கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார்.அவருக்கு அடுத்து திமுக தலைமை பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேள்விக்கு முதலில் பரிந்துரையாவது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான். மேலும் இந்த நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுக விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவீர […]
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிதி அமைச்சர்பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் நாளை (ஜூலை 5ஆம் தேதி )தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இதற்கு முன்பாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு, அவர்களின் வருமான உச்சவரம்பை அறிந்து, தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் .மேலும் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் அமைச்சர் காமராஜ் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தனி நபர் நகைக்கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த ராஜினாமா செய்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். எனவே உடனடியாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ராகுல் காந்தியின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது. ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடரவேண்டும் என விரும்புகிறேன்.எல்லோரையும் இணைக்கும் சக்தியாகவும், மக்களை கவர்ந்து இழுக்கும் தலைவராகவும் ராகுல் காந்தி உள்ளார் .தேர்தல் தோல்விக்கு ராகுல் […]
சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் திட்டத்தில் தமிழ் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட மத்திய சட்டத்துறை அமைச்சரும் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.
த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.அதில், த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஜூலை 18-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு […]