வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்திய தேசத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது . மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில்,உலகத்திற்கு தமிழனத்தை அடையாளம் காட்டும் விதமாக புறநானுற்றுப்பாடலை மேற்கோள் காட்டியுள்ளார் நிதியமைச்சர் என்று கூறினார்.
பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜக குடும்பக் கட்சி கிடையாது. தொண்டர்களின் கட்சி ஆகும் .பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம். ஆனால் சிலருக்கு குடும்பம் மட்டுமே பிரதானம் பாஜக ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தையே கிடையாது. விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதாவுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு ஏமாற்றி வந்தது கண்டனத்திற்குரியது .நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் தமிழக அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும் .கிராமப்புற மாணவர்கள் கனவில் கூட மருத்துவப் படிப்பை நினைக்க முடியாத சூழலை […]
தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் தருவோம். கோதாவரி – காவிரி இணைப்பிற்காக விரிவான திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது .நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே அதிமுக சார்பில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தொகுதிக்கு இவ்வளவு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் […]
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதா நிராகரிக்கப்பட்டிருப்பது சட்டப்பேரவைக்கும், தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது . நீட் தேர்வை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து, சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக எம்.பி-க்கள் ஒன்றுபட்டு, […]
சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போய் மாதங்கள் கடந்துவிட்டன. சமூக வலைத்தளங்களிலும் பல முறை முகிலன் எங்கே என்ற கேள்விகளும் ஏராளமாய் ஒலித்தன. இந்நிலையில் இவரது நண்பர் சண்முகம் என்பவர், ‘ தான் திருப்பதிக்கு செல்கையில் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் ஆந்திர போலீசார் பிடியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அழிக்காதே அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என ஓங்கி […]
காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல்காந்தியை போன்று ஒரு இளைஞர் தேச தலைவராக மீண்டும் வர வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று தன் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். அவரது ராஜினாமாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் அலுவல் காரிய கமிட்டிற்கு அனுப்பினார். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், […]
நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை, மத்திய அரசு […]
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் மாநிலங்களை உறுப்பினர் ஆகிறார். இந்த அறிவிப்பை பாமக மாநில தலைவர் ஜி .கே மணி அவர்கள் தெரிவித்துள்ளார். தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யபா எம்.பி யாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் . கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகியுள்ளார். மாநிலங்களவைக்கான உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக விடம் இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை காங்கிரஸ் க்கு ஒதுக்க காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது.அந்த […]
டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட இன்னும் ஒரு வாரத்தில் அவரை விட்டு விலகி விடுவார் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் பின்னல் சிங்கம்,புலி ஆகியவை துரத்தும் நிலையில் அதை உணராமல் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். சிவகாசியில் பள்ளி மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் தற்போது தனிமையில் இருப்பதால் பயந்து போய் உள்ளார். அதிமுக என்ற பெரிய கட்சியை அவர் குடும்ப […]
கர்நாடகாவில் 11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார். நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக […]
மாநிலங்களவை தேர்தல் தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.இதனால் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன்.மதச்சார்பின்மையை காப்பாற்ற பாடுபடுவேன். கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க பணியாற்றுவேன் என்று கூறினார்.
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.அப்போது அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார் […]
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் மக்களவை தொகுயில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவதாக இருந்தது.ஆனால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார். […]
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதன் பின்னர் இறுதியாக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முகமது ஜான் […]
சட்டப்பேரவை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ. ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.எனவே திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகின்றனர்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனால் இன்று தலைமைச் செயலகம் சென்ற வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து […]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.இளைஞரணி செயல்பாடுகளை வேகப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணி சார்பாக கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பின் தனது முதல் ஆலோசனையை நடத்துகிறார் என்பது […]
சென்னையில் திமுக சார்பில் ற மழைநீர் சேகரிப்பு திட்ட விழா நடைபெற்றது.இதில் திமுக தளிர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், தமிழகம் முழுவதும் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியினர் திமுகவின் நாடாளுமன்ற வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் என்ன செய்ய போகிறார்கள் எனக் கேட்டனர். ஆனால் பதவியேற்ற முதல் நாளே திமுக எம்.பி.க்கள் சாதனை படைத்தனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.