நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

evks

தமிழ்நாட்டில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம். 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ அவர்கள், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களை கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார். தற்போது நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. அமணிப்பூரில், கலவரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் மோடிக்கு அதுபற்றிய நினைவு வந்திருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் போவதாக சொல்கிறார்கள். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  அண்ணாமலை வெளியிடும் தி.மு.க. பைல்கள் எல்லாமே பெயில் ஆகும். தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது; வீட்டில் இருப்பவர்களே அவருக்கு ஓட்டு போடுவார்களா என தெரியவில்லை; வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருப்பதால், அவரே அவருக்கு ஓட்டு போட மாட்டார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இதுதான் உதாரணம்; இந்த கட்சிகளை எல்லாம் அழைத்து வைத்து கூட்டணி என சொல்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்