பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்..! விமர்சனத்திற்குள்ளாகும் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற சபாநாயகர்..!

Default Image

இம்ரான் கானுக்கு ஆதரவாக செயல்படுவிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் உரையாற்றிய, பிரதமர்  இம்ரான்கான்  பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாகவும் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படாவிட்டால், தெருவில் இறங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருவது, பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவை சேகரிக்க அதிக அவகாசம் வாங்கும் முயற்சியாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கெய்சர், இம்ரான் கானுக்கு ஆதரவாக செயல்படுவிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்