Afghanistan:பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இனி ஆண்கள்,பெண்கள் தனியாக தான் செல்ல வேண்டும்
ஆப்கானிஸ்தானின் பொழுதுபோக்கு பூங்காக்களில் பாலினப் பிரிவினையை தலிபான்கள் அமல்படுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 4 நாட்கள் புதன் முதல் சனிக்கிழமை வரை ஆண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் அதே வேளையில், பெண்கள் வாரத்தின் பிற்பகுதியில் மற்ற 3 நாட்கள் அங்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாலினப் பிரிவினை விதிகளை மேலும் அமல்படுத்தும் என்று செய்தி நிறுவனம் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், தலிபான்கள் தங்களது ஆயுதங்களை பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது, இது தலிபான்கள் குழுவை மற்ற உலக நாடுகள் மத்தியில் அவர்களின் உருவத்தை மென்மையாக்குவதற்கான மற்றொரு முயற்சியாகத் பார்க்கப்பட்டது.
கடந்த வாரம் பள்ளிகளுக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். பெண்களுக்காக உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை திரும்ப பெறுவதாக தலிபான்கள் அறிவித்தனர்.
இவ்வாறு தலிபான்கள் அடுத்த நடவடிக்கையாக பொழுதுபோக்கு பூங்காக்களில் கட்டுப்பாடு விதித்துள்ளது,அங்குள்ள மக்கள் அடிப்படை உரிமைகளை பெறுவதில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை காட்டுகிறது.