நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி.
நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார்.
மேலும் சபையில் 271 பேரில் 232 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர், அதில் வாக்களித்த அல்லது சபயைவிட்டு வெளியேறாதவர்களில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 28 அதிருப்தி உறுப்பினர்கள் – ஒருங்கிணைந்த மார்க்சிச லெனினிசவாதிகள் அடங்குவர். மேலும் இது செப்டம்பர் 2015 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தோல்வியுற்ற முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகும்
பாராளுமன்றத்தில் தோல்வியை எதிர்கொண்ட கே.பி. ஓலி, 38 மாதங்கள் அரசாங்கத்தை வழிநடத்திய பின்னர் அதிகாரத்திலிருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…