கணக்கு காண்பித்ததைவிட வங்கி கணக்கில் அதிக தொகை – அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் வருமானவரித்துறையினரிடம் தெரிவித்ததை விட மிக அதிகமான பணம் உள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் வருமானவரித்துறையினரிடம் தெரிவித்ததை விட மிக அதிகமான பணம் உள்ளது.
செந்தில் பாலாஜி வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ரூ.1.34 கோடி டெப்பாசிட்டாகியுள்ளது. அவரது மனைவி மேகலாவின் பெயரில் வங்கியில் ரூ.29.55 லட்சம் டெபாசிட் ஆகியுள்ளது. பலமுறை விசாரணைக்கு அழைத்தும் வராமல் அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்தா வாங்கினார். மேலும், ஓட்டுநர் நடத்துனர் நியமனம் தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.