நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் – பிரதமர் மோடி
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து விளக்கியுள்ளார். பின் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைபபடங்களை பரிசாக வழங்கினர். அதன்பின் தொடர்ந்து பேசிய அவர், நிலவில் சந்திராயன் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ சக்தி’ என பெயரிட்டு அழைக்கப்பட உள்ளது.
சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு ‘திரங்கா’ (மூவர்ணக்கொடி) என பெயரிடப்பட்டுள்ளது. எந்த தோல்வியும் நமக்கு இறுதியானது அல்ல என்பதை நினைப்பூட்டும் வண்ணம் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.