அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..!
கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது என செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த கபில் சிபல் அவர்கள் தனது வாதத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அவர்களால் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது. போலீசாரிடம் தான் ஒப்படைக்க முடியும் தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.
முன்னதாக நேற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில்நடைபெற்றது. அப்போது நீதிபதி நிஷா பானு கூறுகையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.