உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம் – கர்நாடக அமைச்சர் ப்ரியங்க் கார்கே
காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்கு செல்லும், உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம் என கர்நாடகா அமைச்சர் பேட்டி.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அமைச்சரை சந்தித்த நிலையில், கர்நாடக அமைச்சர் ப்ரியங்க் கார்கே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்கு செல்லும், உபரி நீரை தேக்குவதற்காகவே மேகதாது அணை திட்டம்; கடலுக்குச் செல்லும் உபரி நீரை பெங்களூரு மாநகர நீர் தேவைக்காகவும், சுற்றுவட்டார கிராமங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே மேகதாது அணை திட்டம்; எனவே யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுப்பதற்காக, இந்த திட்டம் இல்லை என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.