சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில், சனாதனம் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது என்பது குறித்து விளக்க பாஜகவினர் தயாராக உள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை; பாஜகவினர் ஹிட்லர் போன்று முசோலினி போன்று பொய்யையே திரும்ப திரும்ப கூறி, மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகின்றனர். அவர்களுக்கும் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்து சமூகத்தை அவர்கள் நேசிக்கவும் இல்லை, அதை உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்பரேட்-ஐ வாழ வைக்கும் ஒரு கட்சி, வாக்கு வங்கிக்கு மட்டுமே மதத்தை பயன்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…