மதுரை ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு..! சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!

trainfire

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ரயில் போட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ அனைத்து பெட்டிகளுக்கு மளமளவென பரவிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ரயிலில் பயணித்த பயணிகள் சிலிண்டரை எடுத்து சென்ற நிலையில்,  ஏற்பட்ட தீ  விபத்தில், இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி முதலில் இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில்  உயிரிழந்தவர்கள் உத்திரபிரதேசத்தை   சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தெற்கு ரயில்வேயின் கூடுதல் மேலாளர் கவுசல் கோசல், ரயில்வே ஐஜி சந்தோஷ் சந்திரன் ஆகியோர் மதுரை விரைகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 5 ஆண்கள் 3 பெண்கள் அடையாளம் தெரியாத ஒருவர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list