மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்!
மதுரை மாநகரை வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது , மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல அது திராவிட நாகரித்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் 2000 ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இன்று இருக்கும் ஒரே நகரம் மதுரை மட்டும் தான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை மதுரைக்கு அருகில் கீழடியில் நடத்திய அகழ்வாய்வில் 2300 ஆண்டுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 1500 க்கும் மேற்பட்டவை இன்றைய தொல்பொருள்கள் நாகரிகத்தின் அடையாளமாக உலகிற்கு பறைசாற்றி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரை நகரம் இந்திய பண்பாடு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல வளர்ச்சிக்கு தனித்துவ பங்களிப்பையும் செலுத்திய நகரமாகும். எனவே, மதுரையை வரலாற்று பாரம்பரிய மிக்க நாகரிகமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.