மூன்றாவது முறை பிரேசிலின் அதிபராகிறார் லுலா டா சில்வா.!
பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் பொல்சொனாரோவை தோற்கடித்து லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தன்னுடன் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்து, பிரேசிலின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்கும் லூலா, மொத்த வாக்குகளில் 50.9% சதவீதமும், அவருடன் போட்டியிட்ட போல்சனாரோ 49.1% சதவீதமும் பெற்றுள்ளதாக தேர்தல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 77 வயதான லுலா டா சில்வாவின் பதவியேற்பு விழா ஜனவரி 1ஆம் தேதி நடைபெற உள்ளது.