#Justnow : வள்ளலாரை பற்றி ஒருவர் உளறி வருகிறார்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என முதல்வர் பேச்சு. 

சென்னையில் துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து இந்த திருமண விழாவில் பேசிய முதல்வர், வள்ளலாரை பற்றி ஒருவர் உளறி வருகிறார் என ஆளுநர் குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மேலும், மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவை எதிர்ப்பவர்களை சிபிஐ, ஐடி, அமலாக்க துறையை வைத்து மிரட்டுகிறார்கள். மேலும் மணமக்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதன்படி மணமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்