இது சற்றும் எதிர்பாக்காத துரதிஷ்டவசமான முடிவு – கிருஷ்ணசாமி

krishnasamy

தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே தொடர் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என  அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அவர்கள், தமிழ்நாடு அரசியலின் இந்த போக்கு சற்றும் எதிர்பார்க்காத துரதிர்ஷ்டவசமான முடிவு. அரசியலில் எதுவும் நிலையானதல்ல. எதிர்வரும் 2024 மே மாத நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எதுவும் நடக்கலாம். பாஜக தேசிய தலைமை தலையிட்டு பேசவேண்டும். இரு தலைவர்களையும் அமரவைத்து பேசினால் மனக்கசப்பு தீரும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்