இது தான் தமிழ்நாடு மாணவர்களுக்கு “செங்கோல்”வழங்கு நீதியா? – ராஜீவ் காந்தி

rajivgandhi

பயோமெட்ரிக் வருகை பதிவேடு கருவி சரியா இயங்க வில்லை என மருந்து கல்லூரியின் அங்கீகாரத்தினையே ரத்து செய்வது நியாமா?

தமிழ்நாட்டின் மூன்று மருத்துவ கல்லூரியுடைய அங்கீகாரம் ரத்து என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையில் தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது என்று சொல்லி பல ஆண்டுகளாக சிறந்த முறையில் இயங்கி வரும் சென்னை ஸ்டேன்லி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று மருத்துவ கல்லூரியுடைய அங்கீகாரம் ரத்து என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது!

ஏற்கனவே நீட் என்கிற தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிரான ஒரு தேர்வை கொண்டுவந்து தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ படிப்பை பாழாக்கி வைத்திருக்கிற ஒன்றிய பாஜக அரசு தற்போது இருக்கிற மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை பாதிக்கும் பாசிச செயல்!

இது தான் தமிழ்நாடு மாணவர்களுக்கு “செங்கோல்”வழங்கு நீதியா? ஒற்றை செங்கலை பல ஆண்டுகளாக நட்டு வைத்துவிட்டு மருத்துவமனை என தம்பட்டம் அடிக்கும் ஒன்றிய அரசு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கருவி சரியா இயங்க வில்லை என மருந்து கல்லூரியின் அங்கீகாரத்தினையே ரத்து செய்வது நியாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்