இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகிறாரா?
பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பில் பிரிட்டன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமை தொடர்ந்து , ‘ரிஷி சுனக்’ கடந்த ஜூலை 13 புதன்கிழமை, பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரிட்டனின் பிரதமராகவும் வெற்றிபெறும் போட்டியில் முதல் சுற்றில் வெற்றிபெற்று முன்னணியில் இருந்தார்.
கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களின் முதல் வாக்குப்பதிவில், ரிஷி சுனக் 88 வாக்குகளைப் பெற்ற நிலையில், பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் 50 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார்.நான்காவது இடத்தில் 40 வாக்குகள் பெற்ற கிம் படேனோச், 37 மற்றும் 32 வாக்குகளைப் பெற்று டாம் டுகெந்தட் மற்றும் சுயெல்லா பிரேவர்மேன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பெற்றனர்.
இரண்டு வேட்பாளர்கள் – முன்னாள் சுகாதாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் மற்றும் கருவூலத் தலைவர் நாதிம் ஜஹாவி – இங்கிலாந்து பிரதம மந்திரிக்கான போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோர் இங்கிலாந்து பிரதமராகும் பந்தயத்தில் உள்ள எட்டு பேரின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
“கட்சிக்கும் நாட்டிற்கும் எனது செய்தி எளிமையானது: நம் நாட்டை வழிநடத்த நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.பணவீக்கம் மற்றும் வரிச்சுமையைக் குறைப்பேன் என ரிஷி சுனக் தனது பிரச்சாரத்தில் கூறினார்.