BJP State President Annamalai [Image source : The Hindu ]
முழுமையாக நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காததால், மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது என அண்ணாமலை அறிக்கை.
தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைய விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த, தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், அதன் தலைவராக, தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐஜி அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, சிறந்த உளவியலாளர் உட்பட ஐந்து பேர் கொண்ட ஆணையம் உருவாக்க இருப்பதாகவும் திமுக அரசு கூறியிருந்தது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், கண்துடைப்புக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, அதன் பின்னர், தங்கள் தோல்வியை மறைக்க, மக்களைத் திசைதிருப்பும் நாடகத்தைத்தான் ஆட்சிக்கு வந்தது முதல் அரங்கேற்றி வருகிறது இந்தத் திறனற்ற திமுக அரசு. அவசரச் சட்டம் கொண்டு வந்தும், அதனை முழுமையாக நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காததால், மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாமல், இனியாவது தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…