மணிப்பூர் விரையும் இந்தியா கூட்டணி..! மைத்தேயி, குக்கி இன மக்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்..!
டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு.
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்றும் நாளையும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என 20 பேர் கொண்ட குழு மணிப்பூர் செல்கிறது.
அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து எதிர்க்கட்சிகள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்தேயி, குக்கி உள்ளிட்ட சமூக மக்களையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு. இந்த குழுவில் கனிமொழி எம்.பி இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மணிப்பூரில் இரு இன மக்களிடையே வன்முறை ஏற்பட்டு நிலையில், இன்று இந்தியா கூட்டணி சந்திக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த வன்முறையால் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர்.