மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, இந்திய கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான். எங்களது நோக்கம் விலைவாசியை குறைப்பது, வேலையின்மையை ஒழிப்பது தான்.
சமையல் எரிவாயு விலையை ரூ.ஆயிரத்துக்கு மேல் உயர்த்திவிட்டு, ரூ.200 குறைத்து நாடகம் ஆடுகின்றனர். பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை. பணக்காரர்களைப் பற்றியே கவலை கொள்கிறது. இந்தியா ஒரு போருக்கு தயாராகிறது. அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்.
தேர்தல் வரும்போதெல்லாம் விலை குறைப்பு மேற்கொள்வதே வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது. விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் தோறும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு குறித்து பேசும் பாஜக தான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது. பயப்பட மாட்டோம், ஊழலையும் அடக்கு முறையையும் எதிர்த்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…