கோபாலபுரம் இல்லத்திற்கு நாம் சென்றால், இந்தப் பொன்மொழியே நம்மை வரவேற்கும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என முதல்வர் ட்வீட்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!” தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னது. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நாம் சென்றால், இந்தப் பொன்மொழியே நம்மை வரவேற்கும்! தலைவர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் திறந்து வைத்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.
“மரத்தை நாம் வளர்த்தால்
மரம் நம்மை வளர்க்கும்!”தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னது. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நாம் சென்றால், இந்தப் பொன்மொழியே நம்மை வரவேற்கும்!
தலைவர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள… pic.twitter.com/nIc9zSSjrf
— M.K.Stalin (@mkstalin) June 7, 2023