இனிமேல் கேரளாவில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இது கட்டாயம் …!

BusStrike

அரசு பேருந்து தொடங்கி கனரக வாகனங்கள் வரை சீட் பெல்ட் அணிந்து பயணிக்கும் விதியை கேரளா அரசு அமல்படுத்த உள்ளது.

பொதுவாக கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறை எல்லா இடங்களிலும் அமலில் உள்ளது. இந்த  நிலையில், விபத்துக்களை தவிர்க்கும் வகையில் விரைவிலேயே அரசு பேருந்து தொடங்கி கனரக வாகனங்கள் வரை சீட் பெல்ட் போட்டு பயணிக்கும் விதியை கேரளா அரசு அமல்படுத்த உள்ளது.

இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனிராஜ் கூறுகையில், கேரளா சாலை பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்துகிறது. மக்கள் விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விதிகளை மீறி நடப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பேருந்து மற்றும் லாரி டிரைவர், அவர்களின் பக்கவாட்டில் இருந்து பயணிப்போர் உள்ளிட்டோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி அமல்படுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்